பயங்கரவாதத்துக்கு மோடியே காரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு மோடியே காரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஜம்மு-காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணியால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் அரசியல் லாபத்துக்காக, இந்தியாவே பெரும் விலை கொடுக்க நேரிட்டிருக்கிறது.
இதற்காக பல அப்பாவி இந்தியர்கள் உயிர்த் தியாகம் செய்து வருகின்றனர்.
மோடியின் தவறான கொள்கைகள் காரணமாகவே, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவு உத்திகளின் தோல்வியும், அப்பாவி இந்தியர்களின் ரத்தமும் இணைவதால் மட்டுமே மோடிக்கு அரசியல் லாபம் கிடைத்து வருகிறது என தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com