சீனத் தயாரிப்பு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்க சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (எஸ்ஜேஎம்)

மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்க சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (எஸ்ஜேஎம்) கடிதம் அனுப்பியுள்ளது.
டோங்லா விவகாரம் தொடர்பாக இந்தியா}சீனா இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை எஸ்ஜேஎம் முன்வைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன் எழுதியிருப்பதாவது:
சீன நிறுவனமான எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் குஜராத்திலும், சிஆர்ஆர்சி என்ற மற்றொரு நிறுவனம் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியிலும் மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் வேதனை அடையச் செய்துள்ளது.
மகாராஷ்டிர அரசு 69 மெட்ரோ ரயில் பெட்டிகளையும், மேற்கு வங்க அரசு 100 மெட்ரோ ரயில் பெட்டிகளையும் தயாரித்துத் தருமாறு அந்த நிறுவனங்களிடம் கோரியுள்ளன.
மிகப் பெரிய சந்தையான நமது தேசத்தை இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. உலக அளவில் சீன நிறுவனங்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை.
தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களையே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அழைத்து வருகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்
டத்தைக் கேலிக்கூத்தாக்கிவிடும்.
எனவே, மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கு சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அந்தக் கடிதத்தில் அஷ்வினி மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com