சீனாவுடன் எல்லைப்பிரச்னை: தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துவங்கியது!

சீனாவுடனான எல்லைப்பிரச்னை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் மத்திய அமைச்சர்கள் எடுத்துரைக்கும் கூட்டம் தில்லியில் இன்று துவங்கியது!
சீனாவுடன் எல்லைப்பிரச்னை: தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துவங்கியது!

புதுதில்லி: சீனாவுடனான எல்லைப்பிரச்னை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் மத்திய அமைச்சர்கள் எடுத்துரைக்கும் கூட்டம் தில்லியில் இன்று துவங்கியது!

காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இன்று விளக்கி கூறுவதென முடிவு எடுக்கப்பட்டது  இதில் பங்கேற்க முக்கிய கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இந்த கூட்டத்தில் திமுக சார்பாக கனிமொழியும், அதிமுக சார்பாக வேணுகோபாலும் கலந்து கொள்கின்றனர்    

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கான இந்த விளக்கக் கூட்டம் நடைபெறுவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com