ஒடிஸா புறக்கணிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்: ராம்நாத் கோவிந்த்

கடந்த காலத்தைப் போன்று ஒடிஸா மாநிலம் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத்
ராம்நாத் கோவிந்த் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தபோது அவரை கைகுலுக்கி வரவேற்கும் முதல்வர் நவீன் பட்நாயக்.
ராம்நாத் கோவிந்த் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தபோது அவரை கைகுலுக்கி வரவேற்கும் முதல்வர் நவீன் பட்நாயக்.

கடந்த காலத்தைப் போன்று ஒடிஸா மாநிலம் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உறுதியளித்தார்.
ஒடிஸா சட்டப் பேரவை கருத்தரங்க அறையில் பிஜு ஜனதாதள எம்எல்ஏக்கள் மத்தியில் ஆதரவு கோரி அவர் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். 'ஒவ்வொரு மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடப்பேன். மேலும் கூட்டாட்சி அமைப்பைக் கருத்தில்கொண்டு எனது கடமைகளை நிறைவேற்றுவேன். எந்தவொரு மாநிலமும் மொழியும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கு என்னால் முயன்றதைச் செய்வேன். நடுநிலையாக நடந்துகொள்வேன். குடியரசுத் தலைவரின் பதவிக்கான கண்ணியம், மரியாதையைக் கட்டிக்காப்பேன்' என்று கோவிந்த் உறுதியளித்தார்.
கூட்டத்துக்குப் பிறகு பிஜு ஜனதாதள செய்தித் தொடர்பாளரும் உணவு வழங்கல் துறை அமைச்சருமான சூர்ய நாராயண் பத்ரோ, செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகவும் மாதிரி மாநிலமாகவும் ஒடிஸாவை மாற்ற மேற்கொண்ட பணிகளுக்காக முதல்வர் நவீன் பட்நாயக்கை கோவிந்த் பாராட்டினார். கடந்த 17 ஆண்டு கால பிஜு ஜனதாதள ஆட்சியில் மாநிலம் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கண்டிருந்தபோதிலும் மத்திய அரசின் புறக்கணிக்கும் போக்கை எதிர்த்து ஒடிஸா போராட வேண்டியிருக்கிறது என்று பிஜு ஜனதாதளத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர் என்று பத்ரோ குறிப்பிட்டார். கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. அதன் பிறகு மதிய உணவுக்காக நவீன் பட்நாயக்குடன் கோவிந்த் அவரது இல்லத்துக்குச் சென்றார். பிறகு முதல்வரின் இல்லத்தில் இருந்து வெளியே வந்த கோவிந்த், தனக்கு அளித்த ஆதரவுக்காக பிஜு ஜனதாதளத்துக்கு நன்றி தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏக்களுடன்...: மதிய உணவுக்குப் பிறகு பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கே.வி.சிங்தேவ் இல்லத்தில் அக் கட்சி எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார் கோவிந்த்.
அணி மாறி வாக்கு?: முதல்வர் மறுப்பு: இதனிடையே, வரும் 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஜு ஜனதாதள எம்.பி.க்களும்எல்ஏக்களும்மாறி வாக்களிப்பர் என காங்கிரஸ் கூறி வருவதை நவீன் பட்நாயக் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com