குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: அதிமுகவின் இரு அணிகளுக்கும் கோபாலகிருஷ்ண காந்தி கடிதம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி, தனக்கு ஆதரவளிக்க கோரி அதிமுகவின் இரு அணிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: அதிமுகவின் இரு அணிகளுக்கும் கோபாலகிருஷ்ண காந்தி கடிதம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி, தனக்கு ஆதரவளிக்க கோரி அதிமுகவின் இரு அணிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக உள்பட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி பொது வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவளிக்கக் கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் (அதிமுக அம்மா அணி), முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா) அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கோபாலகிருஷ்ண காந்தி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எழுதியுள்ள கடித்திலும் இதேபோன்ற கோரிக்கையை விடுத்துள்ளேன்.
மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியது தொடர்பாகவும், எம்ஜிஆரின் கருணை உள்ளம் குறித்தும் எனது கடிதங்களில் நினைவுபடுத்தியுள்ளேன்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக எனது பெயரை முன்மொழிந்த கட்சிகளில் திமுகவும் ஒன்று. அதற்காக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தேன். இதேபோல, எனக்கு ஆதரவு தருவதாக பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. அன்புமணி ராமதாஸும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறேன். நமது அரசியலைப்பின் அடிப்படை கொள்கைகளான கருத்து சுதந்திரம், சமத்துவம் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் சூழலில் நாடு தற்போது உள்ளது.
குடியரசு துணைத் தலைவராக நாட்டுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்தால், கருத்து சுதந்திரம், நீதியின் பக்கம் என்றும் நிற்பேன் என்று கோபாலகிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com