சூரிய மின்சக்தியுடன் கூடிய ரயில் தில்லியில் அறிமுகம்

சூரிய மின்சக்தியுடன் கூடிய ரயிலை தில்லியில் ரயில்வே துறை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.
தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட சூரியமின் உற்பத்தி சாதனங்களுடன் கூடிய நாட்டின் முதல் ரயில்.
தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட சூரியமின் உற்பத்தி சாதனங்களுடன் கூடிய நாட்டின் முதல் ரயில்.

சூரிய மின்சக்தியுடன் கூடிய ரயிலை தில்லியில் ரயில்வே துறை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.
தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில், ஊடகத்தினரின் பார்வைக்காக, இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினார். அப்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்களைத் தயாரிப்பதில், இது அடுத்தக் கட்ட பாய்ச்சல் என்று அவர் குறிப்பிட்டார்.
டீசல் எஞ்சினுடன் கூடிய அந்த ரயில் பெட்டிகள் மீது சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு மின் விளக்குகள், மின் விசிறிகள், தகவல் பலகைகள் இயக்கப்படும். இரவு நேரத்திலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் சூரிய மின்தகடுகளுடன் மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ரயில்களில் டீசலில் இயங்கும் ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இருந்து மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
1,600 குதிரைத் திறன் கொண்ட இந்த ரயிலை, சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலை தயாரித்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்தகடுகள், மின்சேமிப்புக் கலம் ஆகியவற்றை இந்திய ரயில்வே நிர்வாகத்தின் மாற்று எரிபொருள் அமைப்பு உருவாக்கியுள்ளது.
இந்த ரயிலில், அடுத்த 6 மாதங்களில் மேலும் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சூரிய மின்சக்தி அமைப்பை பயன்படுத்துவதன் மூலம், டீசல் பயன்பாடு குறையும், கரியமில வாயுவின் வெளியேற்றமும் குறையும். 6 பெட்டிகளைக் கொண்ட ரயிலில் சூரிய மின்சக்தி அமைப்பு பொருத்தப்படுவதால், ஆண்டுக்கு 21,000 லிட்டர் டீசல் சேமிக்கப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மிச்சமாகும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com