பெங்களூரு மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க சசிகலாவுக்கு தனி அறை: டிஐஜி டி.ரூபா புகார்

பெங்களூரு மத்திய சிறையில் பார்வையாளர்களைச் சந்திக்க சசிகலாவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்ததாக கர்நாடக மாநில காவல்துறை தலைவருக்கு அளித்துள்ள தனது இரண்டாவது புகார் அறிக்கையில் சிறைத் துறை

பெங்களூரு மத்திய சிறையில் பார்வையாளர்களைச் சந்திக்க சசிகலாவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்ததாக கர்நாடக மாநில காவல்துறை தலைவருக்கு அளித்துள்ள தனது இரண்டாவது புகார் அறிக்கையில் சிறைத் துறை டிஐஜி டி.ரூபா தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அமருவதற்கு ஓர் இருக்கையும், மேஜையும், அதன் எதிரில் பார்வையாளர்கள் அமருவதற்கு நான்கு இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இது சட்ட விதிமீறலாகும். சசிகலாவுக்கு முக்கியப் பிரமுகர்களுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சசிகலாவின் நடமாட்டத்தையும், பார்வையாளர்களைச் சந்திப்பதைக் கண்காணிக்கப் பொருத்தப்பட்டிருந்த 7, 8-ஆம் எண் கொண்ட சிசிடிவி கேமரா பதிவுகள் சேமிக்கப்படவில்லை. சிறைக்குச் சென்றபோது தன் முயற்சியால் எடுக்கப்பட்ட காணொலிக் காட்சியின் பதிவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
சிறை விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிபி ஆய்வு: இதனிடையே, கர்நாடக சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவ், பெங்களூரு மத்திய சிறைச் சாலைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அப்துல் கரீம் தெல்கி ஆகியோரின் அறைகளைப் பார்வையிட்ட சத்தியநாராயண ராவ், அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com