ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் குடும்ப பிரபோதன் நிகழ்ச்சிக்கு கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் குடும்ப பிரபோதன் நிகழ்ச்சிக்கு கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குடும்பத்துக்கு ஆலோசனை அளிப்பது தொடர்பாக குடும்ப பிரபோதன் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று, நெறிகள், இந்தியர்கள் அணிய வேண்டிய உடைகள் உள்ளிட்டவற்றை போதனை செய்ய இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதவியுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையில், ஹிந்து மத வழக்கத்தை திணிக்கும் முயற்சி இதுவாகும். இது தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.
எதை சாப்பிடுவது, எந்த உடையை அணிவது என்பது குறித்து முடிவெடுக்க நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. அது அவர்களின் அடிப்படை உரிமைகளாகும். இதில் தலையிட ஆர்எஸ்எஸ் அமைப்பு விரும்புவது, மனித உரிமைகளுக்கு எதிரான செயலாகும்.
குடும்ப பிரபோதன் நிகழ்ச்சியின்மூலம், மனுஸ்மிருதியை பரப்புவதற்கு ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. பசு பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில் தலையிட்டு, மக்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் போதிப்பதை தடுக்க வேண்டும் என்று அந்த பதிவில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com