எல்லையில் அத்துமீறினால் உரிய பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழுஉரிமை உண்டு என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்லையில் அத்துமீறினால் உரிய பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழுஉரிமை உண்டு என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜெளரி மாவட்ட எல்லையில் திங்கள்கிழமை பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் (டிஜிஎம்ஒ) லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட், பாகிஸ்தான் டிஜிஎம்ஒ ஆகியோர் தொலைபேசியில் பேசினர்.
அப்போது, எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் தெரிவித்தார். சுமார் 10 நிமிடங்கள் வரை இரு அதிகாரிகளும் பேசினர் என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகளின் தொலைபேசி பேச்சு குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஆனந்த் கூறியதாவது:
பாகிஸ்தான் கமாண்டர் மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். மிர்ஷா முதலில் பேச்சைத் தொடங்கினார். அப்போது, கடந்த வாரம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஆனால், பாகிஸ்தான் தரப்புதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இந்தியா அதற்கு பதிலடி கொடுப்பதாகவும் இந்திய அதிகாரி குற்றம்சாட்டினார். 'மேலு'ம், எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்றும் இந்திய ராணுவ அதிகாரி குறை கூறினார் என்றார் அவர்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 23 முறை இந்தியப் பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு முறை ஊடுருவல் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியத் தரப்பில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com