சட்ட விதிகளின்படியே சஞ்சய் தத் விடுதலை: மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு விளக்கம்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்ச் தத், சட்ட விதிகளின்படியே தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பே
சட்ட விதிகளின்படியே சஞ்சய் தத் விடுதலை: மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு விளக்கம்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்ச் தத், சட்ட விதிகளின்படியே தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பே விடுவிக்கப்பட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்திடம் மகாராஷ்டிர அரசு விளக்கமளித்துள்ளது.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அந்தக் குற்றத்துக்காக, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் உறுதி செய்ததையடுத்து, அவரை போஸீலார் புணேவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நன்னடத்தையைக் காரணம் காட்டி தண்டனைக் காலம் முடிவடைவதற்கு 8 மாதங்களுக்கு முன்னரே சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசு விடுவித்தது.
இதனை எதிர்த்து, பிரதீப் பாலேக்கர் என்பவர் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிர சிறைத் துறை சலுகை அளித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், அதுகுறித்து விளக்கமளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் ஆர்.எம். சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ் முன்னிலையில் மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தை தண்டனை நிறைவுக் காலத்துக்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலை செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை.
மகாராஷ்டிர சிறைத் துறையின் தண்டனைக் குறைப்புச் சட்டப்படி, நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மாதமொன்றுக்கு 3 நாள்கள் வரை தண்டனைக் குறைப்பு செய்யலாம்.
அந்த வகையில், சஞ்சய் தத்துக்கு 256 நாள்கள், அதாவது எட்டு மாதங்கள் மற்றும் 16 நாள்கள் தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், மேல் விசாரணைக்காக இந்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com