சிகரெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி மேலும் உயர்வு

சிகரெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி நிர்ணயமானது திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சிகரெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி நிர்ணயமானது திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றன. கடந்த மாதம் அனைத்து சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது. அதில், சிகரெட்டுகளுக்கு உச்ச வரம்பான 28 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தீர்வை வரியாக 5 சதவீதம் அதன் மேல் விதிக்கப்பட்டது. அவை மட்டுமன்றி 1,000 சிகரெட்டுகளுக்கு குறிப்பிட்ட தொகை வீதம் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு வரியும் கூடுதலாக விதிக்கப்பட்டது.
சிகரெட் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அதன் மீது இவ்வாறு பல்வேறு வரிகள் சுமத்தப்பட்டன. இருப்பினும் அவை அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டாலும் கூட, ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சிகரெட்டுகள் மீது இருந்த வரி விகிதத்தை விட அந்த அளவு குறைவாகவே இருந்து வந்தது.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் சிகரெட் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இந்த முரண்பாட்டைக் களையும் நோக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிகரெட்டுகள் மீதான நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு தற்போது விதிக்கப்பட்ட வரியுடன் சேர்த்து மேலும் ரூ.792 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் புதிய வரிவிதிப்பு உடனடியாக அமலாகிவிட்ட போதிலும், சில்லறை விற்பனையில் சிகரெட்டின் விலை உயர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com