மத்தியப்பிரதேசத்தில் புதிய திட்டம்: நோயாளிகளுக்கு ஜோதிடம் பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மாநில அரசு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஜாதகம் பார்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.


போபால்: மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மாநில அரசு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஜாதகம் பார்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் துவக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக தகுதி வாய்ந்த ஜோதிட நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் மூன்று அல்லது நான்கு மணி நேரம் நோயாளிகளைப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜோதிட, வாஸ்து நிபுணர்கள், நோயாளிகளின் ஜாதகத்தை ஆராய்ந்து, அவர்களது ஜாதக அமைப்புக்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மூட நம்பிக்கை இல்லை என்றும், அறிவியலின் மற்றொரு பக்கத்தையும் பயன்படுத்துவதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதகம் இல்லாத நோயாளிகளுக்கு, பிரசன்ன முறையில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு ஜோதிடம் பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com