இந்தியாவை தாக்குவதற்கு சீனா தயாராகி விட்டது: முலாயம் சிங் எச்சரிக்கை

இந்தியாவை தாக்குவதற்கு சீனா தயாராகி விட்டதாக சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவை தாக்குவதற்கு சீனா தயாராகி விட்டது: முலாயம் சிங் எச்சரிக்கை

இந்தியாவை தாக்குவதற்கு சீனா தயாராகி விட்டதாக சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் இந்த பிரச்னையை முன்வைத்து, முலாயம் சிங் யாதவ் புதன்கிழமை பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
சீனாவிடம் இருந்து இந்தியா தற்போது மிகப்பெரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. பல ஆண்டுகளாக, மத்திய அரசுக்கு நான் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளேன். ஆனால், யாருமே எனது கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
பாகிஸ்தானுடன் சீனா தற்போது கைகோர்த்துவிட்டது. இந்தியாவை தாக்குவதற்கு முழு அளவில் அந்நாடு தயாராகி விட்டது. காஷ்மீரில், சீன ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளில், சீன ராணுவத்தினர் அண்மைக்காலமாக தென்படுகின்றனர். அந்தப் பகுதியில் சீனாவும் சாலைகளை கட்டமைத்து வருகிறது. இதுவே, இந்தியாவுக்கு எதிராக சீனா கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இதற்கு, ராஜீய ரீதியில் இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவைத் தாக்குவதற்கு பாகிஸ்தானில் அணுகுண்டுகளை சீனா புதைத்து வைத்துள்ளது. இதுகுறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் நன்கு தெரியும்.
திபெத் விவகாரத்தில், காங்கிரஸ் முதுபெரும் தலைவர் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டார் (மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவை குறிப்பிட்டார்). தலாய் லாமா போன்ற திபெத் தலைவர்கள், இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவானவர்கள் ஆவர்.
எனவே, திபெத் விவகாரத்தில் இதுவரை கடைப்பிடித்த நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும். திபெத் சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. தலாய்லாமாவுக்கு இந்தியா அதிக ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தியாவின் எதிரி நாடு, சீனா தான்; பாகிஸ்தான் கிடையாது. பாகிஸ்தானால் நமக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது.
பூடான் நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இந்தியாவுக்கு உள்ளது. நேபாளத்தின் மீதும் சீனா கண்வைத்துள்ளது. சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுகுறித்து நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றார் முலாயம் சிங் யாதவ்.
இந்தியச் சந்தைகளில் சீனப் பொருள்கள் அதிக அளவில் குவிந்து வருவதாகவும் முலாயம் சிங் தெரிவித்தார்.


மக்களவையில் புதன்கிழமை பேசும் சமாஜவாதி நிறுவனரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான முலாயம் சிங் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com