ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 85 பள்ளிகள் மூடப்பட்டன

ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நொஷெரா, மாஞ்ச்கோட், பகுதியில் 85 பள்ளிகள் மூடப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 85 பள்ளிகள் மூடப்பட்டன

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நொஷெரா, மாஞ்ச்கோட், பகுதியில் 85 பள்ளிகள் மூடப்பட்டன.
காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பகுதிகளில் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்திய ராணுவ தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜூரி செய்தியார்களிடம் கூறுகையில் நொஷெரா, மாஞ்ச்கோட், பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

பாதுகாப்பு கருதி  சுமார் 85 பள்ளிகள் மூடப்பட்டது. அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் 8 முறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 2 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதலில் சுமார் 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com