ஜிஎஸ்டி-க்கு பிறகு பொருள்களின் விலை 8% வரை குறைந்துள்ளது: ஜேட்லி தகவல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு பொருள்களின் விலை 4 முதல் 8 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர்.

தில்லியில் பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதில் ஜேட்லி பேசியதாவது:
அனைத்துத் தரப்புக்கும் வெற்றி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு முறையில் அதிகாரிகளின் ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதிக்குப் பிறகு பொருள்களின் விலை 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளது.
பொதுமக்கள் நலன்களின் மீதும் மாநில நலன்களின் மீதும் முழு அக்கறையுடன்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஜிஎஸ்டி-யால் வளர்ச்சி அதிகரிக்கும். வருவாய் 80 சதவீதம் அளவுக்கு உயரும். நாட்டின் வர்த்தகச் சந்தை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமான வர்த்தகர்கள் ஜிஎஸ்டி-யில் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். ஒரே பொருளுக்கு பல்வேறு நிலைகளில் வெவ்வேறு வரிகள் விதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதன் மூலம் வரிச்சுமை வெகுவாகக் குறையும் என்றார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் மோடியின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்களால், குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் பயணத்தினால், நமது நாட்டுக்கு அரசியல்ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் கிடைக்க இருக்கும் நன்மைகள் குறித்து பாஜக எம்.பி.க்களிடம் எடுத்துரைக்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com