நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: தம்பிதுரை

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: தம்பிதுரை

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, தில்லியில் பிரதமர் மோடியை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள் தங்கமணி, சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக எம்.பி.,க்கள் ஆகியோர் சந்தித்துப் பேசினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை,
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2010ல் நீட் தேர்வுக்கான கருத்துருவை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. 2012ல் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு நீட் தேர்வை நடத்த திட்டமிட்டது.

நுழைவுத்தேர்வு முறை தேவையற்ற தேர்வு என்பது ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் கருத்து. நீட் தேர்வால் மாநில பாடத் திட்ட மாணவர்கள் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நீட் விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவை.

ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும். எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். நீட் தேர்வு பிரச்னையில் விரைவிலேயே தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நட்டா, பிரகாஷ் ஜாவ்டேகர் ஆகியோரையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com