வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: ராம்நாத் கோவிந்த்!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட  ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
 வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: ராம்நாத் கோவிந்த்!

புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட  ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில், 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. பிற மாநிலங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் தில்லியில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவில் மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட மீராகுமார் 34 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பின்பு ராம்நாத் கோவிந் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும், எனது வெற்றிக்கு உதவியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

எனது பணியினை நான் சிறப்பாக செய்ய முயற்சிப்பேன். ஜனாதிபதி பதவிக்கு என்று உள்ள கண்ணியத்தின் படி நடந்து கொள்வேன்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com