4ஜி வசதியுடன் 100 கோடி பேருக்கு இலவச ஜியோ செல்போன்: முகேஷ் அம்பானி அறிவிப்பு

இந்தியர்கள் அனைவருக்கும் இலவச 4ஜி வசதி கொண்ட ஜியோ செல்போன் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.
4ஜி வசதியுடன் 100 கோடி பேருக்கு இலவச ஜியோ செல்போன்: முகேஷ் அம்பானி அறிவிப்பு


இந்தியர்கள் அனைவருக்கும் இலவச 4ஜி வசதி கொண்ட ஜியோ செல்போன் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.

தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய, ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் 100 கோடி பேருக்கு 4ஜி வசதி கொண்ட ஜியோ செல்போனை, இலவசமாக வழங்கப் போவதாக முகேஷ் அம்பானி  அறிவித்துள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

இலவச 4 ஜி வசதி கொண்ட ஜியோ செல்போன் பெற ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஜியோ செல்போனுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பரில் செல்போன் கிடைக்கும். இலவச செல்போனை பெற காப்பீடாக ரூ.1500 செலுத்த வேண்டும். இந்த தொகை, 36 மாதங்களுக்குப் பிறகு திருப்பி அளிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்தார்.

'இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன்' என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஜியோ செல்போன், ஜியோவின் அனைத்து ஆப்களையும் உதாரணமாக ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் போன்றவை பதிவேற்றம் செய்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு, 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இலவச ஜியோ 4ஜி மொபைலில் அடங்கியுள்ள சிறப்பு அம்சங்கள்:

 - ஆல்ஃபா நியூமெரிக் கீபேட் (Alpha numeric Keypad)
 - 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே (2.4 inch QVGA display)
 - எஃப் எம் ரேடியோ (FM radio)
 - டார்ச் லைட் (Torch Light)
 - ஹெட்ஃபோன் ஜாக் (Headphone Jack)
 - எஸ்டி கார்ட் ஸ்லாட் (SD card slot)
 - 4 வழி நேவிகேஷன் சிஸ்டம் (4 way navigation system)
 - ஃபோன் காண்டாக்ட்ஸ் (Phone contact)
 - கால் ஹிஸ்டரி (Call history)
 - ஜியோ செயலிகள் (Jio Apps)


மேலும், ஜியோ மொபைல் கேபிள் டிவி என்ற சாதனமும் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

ஜியோ மொபைல் கேபிள் டிவி சாதனத்தை ஸ்மார்ட் டிவி மட்டுமல்லாமல், பழைய சிஆர்டி தொலைக்காட்சிகளிலும் இணைத்துக் கொண்டு, 3 முதல் 4 மணி நேரங்களுக்கு டிவி திரையில் விருப்பப்பட்ட வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம். இதற்கு மாதாந்திர கட்டணமாக 309 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com