கர்நாடக முதல்வரை சோனியா நீக்க வேண்டும்: தனிக் கொடி விவகாரத்தில் சிவசேனை கருத்து

கர்நாடகத்துக்கு தனிக் கொடியை உருவாக்க முயற்சி எடுத்துவரும் அந்த மாநில முதல்வர் சித்தராமையாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ராஜிநாமா செய்ய வைக்க வேண்டும் என்று

கர்நாடகத்துக்கு தனிக் கொடியை உருவாக்க முயற்சி எடுத்துவரும் அந்த மாநில முதல்வர் சித்தராமையாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ராஜிநாமா செய்ய வைக்க வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் வியாழக்கிழமை வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகத்துக்கென தனி கொடியை உருவாக்க சித்தராமையா திட்டமிடப்பட்டிருப்பது நமது தேசியக் கொடி, இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரை அவமதிக்கும் செயலாகும். எனவே, சித்தராமையாவை சோனியா காந்தி ராஜிநாமா செய்ய வைத்து தேசத்தின் மீது அவர் வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகத்தில் இதுபோன்ற ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது அக்கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. இதுபோன்ற முயற்சி தேசத்தின் ஒற்றுமைக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.
தனிக் கொடியை உருவாக்குவதற்கு பதிலாக பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடகத்தை சித்தராமைய்யா தனித்துக் காட்ட வேண்டும்.
தனிக் கொடி உருவாக்க பல்வேறு எதிர்ப்பலைகள் வந்த பிறகும், அரசமைப்புச் சட்டத்தில் தனிக் கொடியை ஒரு மாநிலம் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடவில்லை என்று சித்தராமைய்யா விளக்கம் அளித்துள்ளார். எனவே, அவரது தலைமையிலான மாநில அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும். அல்லது மத்திய அரசிடம் செல்லும்
நிதி உதவிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இன்று தனிக் கொடி கேட்பவர்கள், நாளை தனி அரசமைப்புச் சட்டம் வேண்டுமென கோரிக்கை விடுப்பார்கள். கர்நாடகத்துக்கு தனிக் கொடி கேட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி தேசத்தின் முதுகில் கத்தியால் குத்தி விட்டது என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்
டும் என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com