டார்ஜீலிங்கில் இணையச் சேவை மீண்டும் அளிக்கப்பட வேண்டும்: ஜிஜேஎம் வலியுறுத்தல்

தனிமாநிலமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவரும் டார்ஜீலிங்கில் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இணையச் சேவையை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்)

தனிமாநிலமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவரும் டார்ஜீலிங்கில் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இணையச் சேவையை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் வலியுறுத்தினர்.
மேற்கு வங்கத்திலிருந்து டார்ஜீலிங் மலைப் பகுதியை தனிமாநிலமாக்க வேண்டும் என்று கோரி கடந்த 36 நாட்களாக ஜிஜேஎம் கட்சியும், அதன் ஆதரவு கட்சிகளும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப் பகுதி முழுவதும் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றாக அணிதிரண்டு பேரணி நடத்தும்போது சில சமயங்களில் வன்முறை ஏற்படுகிறது. சமூக வலைதலங்கள் மூலம் அவர்கள் ஒன்று சேர்வதை தடுக்கும் நோக்கில் மலைப் பகுதி முழுவதும் தற்காலிகமாக இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இணையச் சேவையை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கோரி ஜிஜேஎம் கட்சியினர் மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். முழு கடை அடைப்புப் போராட்டம் காரணமாக, மருந்துக் கடைகள் தவிர ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com