நேஷனல் ஹெரால்டு விவகாரம்: ஹூடா மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஆதரவாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஆதரவாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதை அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் 2008-ஆம் ஆண்டு இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது. எனினும், கடந்த மாதம் இப்பத்திரிகை காங்கிரஸ் சார்பில் மீண்டும் புதிதாகத் தொடங்கப்பட்டது.
இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை ராகுல், சோனியா உள்ளிட்டோர் அபகரித்துவிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று வோரா சார்பில் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வோரா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1982-ஆம் ஆண்டு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ஹரியாணாவின் பஞ்ச்குலா பகுதியில் அரசு சார்பில் குத்தகைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலம் 1996-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்படாமல் இருந்ததால் குத்தகை விதிகளின்படி அரசு அதனைத் திரும்ப எடுத்துக் கொண்டது. இந்நிலையில், 2005-ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த ஹூடா, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் அந்த நிலத்தை ஒதுக்கினார். இதில் அந்த நிறுவனத்தின் தலைவர் வோராவுக்கு தொடர்பு உள்ளது என்று அமலாக்கத் துறை தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com