வேகத் தடைகளால் தினமும் 9 பேர் உயிரிழப்பு: மத்திய அரசு

சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடைகளால் இந்தியாவில் தினமும் 9 பேர் வரை உயிரிழந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேகத் தடைகளால் தினமும் 9 பேர் உயிரிழப்பு: மத்திய அரசு

சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடைகளால் இந்தியாவில் தினமும் 9 பேர் வரை உயிரிழந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகள் அதிகரித்து வருவது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
முந்தைய காலங்களை ஒப்பிடும்போது, இந்தியாவில் தற்போது சாலை விபத்துகள் சற்று குறைந்திருக்கின்றன. எனினும், அதிகரித்து வரும் வாகன மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தால் சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
இந்தியாவில் சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடைகளால் தினமும் 9 பேர் வரை உயிரிழக்கின்றனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைகிறார்கள்.
கடந்த 2015-ஆம் ஆண்டில், நம் நாட்டில் மொத்தம் 11,084 விபத்துகள் வேகத் தடைகளால் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 3,409 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டில், வேகத் தடைகளால் நேரிட்ட விபத்துகளால் 3,633 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தடுப்பதற்காக, குறைந்தபட்சம், தேசிய நெடுஞ்சாலைகளிலாவது வேகத்தடைகளை அமைக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தைக் குறைத்தே ஆக வேண்டிய இடங்களில் சிறிய அளவிலான தொடர் வேகத்தடைகளை அமைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார் நிதீன் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com