உள்நாட்டு 'போஃபர்ஸ்' பீரங்கிகளில் போலியான சீன உதிரி பாகங்கள்: சிபிஐ வழக்குப் பதிவு

போஃபர்ஸ் நிறுவன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தனுஷ் ரக பீரங்கிகளில் போலியான சீன உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு 'போஃபர்ஸ்' பீரங்கிகளில் போலியான சீன உதிரி பாகங்கள்: சிபிஐ வழக்குப் பதிவு

போஃபர்ஸ் நிறுவன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தனுஷ் ரக பீரங்கிகளில் போலியான சீன உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றபோது, போஃபர்ஸ் பீரங்கிகள் நமது ராணுவத்தில் முக்கிய பங்காற்றின. இந்த பீரங்களின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் 'தனுஷ்' என்ற பெயரில் உள்நாட்டு பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பீரங்கிகளுக்காக, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை என்று கூறி மலிவு விலையிலான போலி சீன உதிரி பாகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: போபர்ஸ் உள்நாட்டு பீரங்கிகளுக்கு உதிரி பாகங்களை (பேரிங்குகள்) கொள்முதல் செய்வதற்காக, ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம், தில்லியைச் சேர்ந்த 'சித் சேல்ஸ் சிண்டிகேட்' என்ற ஆயுத உதிரி பாகங்கள் விநியோக நிறுவனத்துக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
அந்த நிறுவனமானது, ஜெர்மனியில் உள்ள சிஆர்பி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்று கூறி, இரு உதிரி பாகங்களை கடந்த 2014-ஆம் ஆண்டில் விநியோகித்தது. ஆனால், அவை ஜெர்மனியில் தயாரிக்கப்படவில்லை; சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலியான ஆவணங்களை தில்லி நிறுவனம் சமர்ப்பித்துள்ளதும் இந்த மோசடிக்கு ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலை அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தில்லி நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத ஆயுத தொழிற்சாலை அதிகாரிகளுக்கு எதிராக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com