நாடாளுமன்றத்தில் பொய் சொல்கிறார் சுஷ்மா: சீன அரசு பத்திரிகை குற்றச்சாட்டு

இந்திய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக சீன அரசு பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பொய் சொல்கிறார் சுஷ்மா: சீன அரசு பத்திரிகை குற்றச்சாட்டு

இந்திய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக சீன அரசு பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' குற்றம்சாட்டியுள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை மையமாக வைத்து இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு வியாழக்கிழமை சுஷ்மா ஸ்வராஜ் விரிவான பதிலளித்தார். அதில் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா-சீனா-பூடான் எல்லை விவகாரத்தில் இந்தியா சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் இருப்பதாகவும் சுஷ்மா கூறியுள்ளது பொய்யான தகவல். இந்திய ராணுவம் சீனப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளது என்பதுதான் உண்மை. இந்தியாவின் இந்த செயலால் உலக நாடுகள்அனைத்தும் திகைப்படைந்துள்ளன. இந்தியாவின் இந்த அத்துமீறலுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
டோகாலாம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அந்த இடத்துக்கு உரிமை கொண்டாடுவதை இந்தியா கைவிட வேண்டும். இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை அல்லாத பிற வழிகள் மூலமும் தீர்த்துக் கொள்ள சீனாவால் முடியும். இந்தியாவின் செயல்பாடுகளை மிகுந்த பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் சீனா கையாண்டு வருகிறது. எனினும், இந்தியாவின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைக்கு தயாராவதைத் தவிர வேறு வழியில்லை. சீன ராணுவம் களமிறங்கினால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும். சீனா தனக்கு சொந்தமான இடத்தில் ஓர் அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது. சீன ராணுவம் ஒரு முடிவெடுத்து களமிறங்கிவிட்டால், சீனப் பகுதியை முழுமையாக மீட்காமல் திரும்ப மாட்டார்கள். அமெரிக்காவும், ஜப்பானும் இந்தியாவை ஆதரிப்பதாக ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com