நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள்: பிரகாஷ் ஜாவடேகர்

நீட் தேர்வின்போது நாடு முழுவதும் ஒரே விதமான கேள்வித்தாள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள்: பிரகாஷ் ஜாவடேகர்

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை நடத்தப்படுகிறது. இந்த தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த மே 7–ந் தேதி நடத்தப்பட்டது. 

இந்தத் தேர்வில் 10 மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் இருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மொழி கேள்வித்தாள்கள் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்னர். 

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் மாணவர்கள் முறையிட்டனர். இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
விளக்கம் கேட்டது. 

இதையடுத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com