பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா: இந்திரா எனது வழிகாட்டி பிரணாப் உருக்கம்

பிரணாப் முகர்ஜிக்கு தனது பிரிவு உபசார விழா உரையில், தனது வழிகாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 'உயர்ந்தவர் என்றும்
பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா: இந்திரா எனது வழிகாட்டி பிரணாப் உருக்கம்

புதுதில்லி: பிரணாப் முகர்ஜிக்கு தனது பிரிவு உபசார விழா உரையில், தனது வழிகாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 'உயர்ந்தவர் என்றும் அவரது ஆளுமை'யை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார்.

நாளையுடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் இன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில், பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி, மக்களவை தலைவர் சுமித்ரா மஹாஜன், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்றம் குறித்த தமது நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரணாப் முகர்ஜி, அரசியலமைப்பை காக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எனக்கு அளித்த பாராட்டுவிழா எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் இந்த நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்திற்கு இந்த நாடாளுமன்றம் உருவம் அளித்தது. நான் 48 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாடாளுமன்றத்தின் நுழைவாயில் நுழைந்தபோது எனக்கு வயது 34. 1969 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். ஜூலை 22 ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் நான் கலந்து கொண்ட முதல் கூட்டம்.

அப்போதிலிருந்து, 37 ஆண்டுகளாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உறுதியான உறுதிப்பாடு, சிந்தனையின் தெளிவு மற்றும் தீர்க்கமான செயல்கள், அவரது உயர்ந்த ஆளுமையே எனது வழிகாட்டியாக இருந்தது என பாராட்டினார்.

இந்த நாடாளுமன்றத்தின் உருவாக்கம், அதன் அரசியல் கண்ணோட்டம் மற்றும் ஆளுமை இந்த ஜனநாயகம் கோவிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிநேரங்கள் மற்றும் நாட்களும் நீடித்து நிலைக்க வேண்டும், விவாதம், விவாதங்கள் மற்றும் அதிருப்தி ஆகியவற்றின் உண்மையான மதிப்பை நான் புரிந்துகொண்டேன் என்று கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது பிரதான பொறுப்பு அரசியலமைப்பின் பாதுகாவலராக செயல்பட்டது. அரசியலமைப்பை பாதுகாக்க, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலிருந்து நான் பெரிதும் பயனடைந்தேன் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பால் பயனுள்ள நேரம் வீணடிக்கப்படுவது குறித்தும் அவர் வேதனை தெரிவித்தார்.

அனைத்து மதத்தினரும் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளனும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர் தான். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். விவாதங்கள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது என உருக்கமாக பேசினார்.

ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டிருப்பது கூட்டுறவுக் கூட்டாட்சி முறைக்கு மிளிரும் உதாரணமாகத் திகழ்வதாகவும், அது, இந்திய நாடாளுமன்றம் எவ்வளவு முதிர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்ட பிரணாப், ஜிஎஸ்டி நமது வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்றார்.

1969 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்த தான், சில சோகங்களையும், வானவில் போன்ற வண்ணமயமான நினைவுகளையும் சுமந்துகொண்டு வெளியேறுவதாக நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய பிரணாப், மோடியுடன் தான் கொண்டுள்ள சூடான, இதமான மற்றும் மரியாதையான நடத்தையும், அணுகுமுறை குறித்த நினைவுகளையும் சுமந்து செல்வதாக குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, தமது பதவிக்காலத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வாஜ்பாய், நரசிம்ம ராவ் ஆகியோர் என் மனதை ஈர்த்தவர்கள். அத்வானி போன்ற பல்வேறு மூத்த தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அத்வானி பல சந்தர்ப்பங்களில் எனக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார். நீண்ட கால பயணம் எனக்கு பல்வேறு படிப்பினைகள் தந்தன என்று தெரிவித்தார்.

தனது 20 நிமிட உரையில், இந்த நாடாளுமன்றத்தை விட்டு செல்வது எனக்கு கவலை அளிக்கிறது. இருப்பினும் மன நிறைவு பணி மகிழ்வை தரும். அனைவருக்கும் நன்றி ! ஜெய்ஹிந்த் !

நாட்டின் குடியரசுத் தலைவராக ஆற்றிய சேவையை பாராட்டி துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாராஜன் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பேசினர்.

பிரணாப் முகர்ஜியின் ஓய்வுக்காலத்துக்காக தில்லி ராஜாஜி சாலையில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தங்கிய 11 ஆயிரத்து 776 சதுர அடி கொண்ட பங்களா தயாராகி வருகின்றது. அந்த பங்களா 8 அறைகள், 2 அடுக்குகள் கொண்டது.

இனி பிரணாப் 75 ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியமும், பிற அரசு சலுகைகளையும் பெறுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com