ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப் பேரவைக்கும் தேர்தல்: அமித் ஷா

மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை பாஜக ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப் பேரவைக்கும் தேர்தல்: அமித் ஷா

மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை பாஜக ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வந்த அவர், செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. இதுவே, பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமும் ஆகும். இதுதொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதிக்க வேண்டும். அதேவேளையில், இந்த யோசனையை தேர்தல் ஆணையத்திடமும் கொண்டு சென்று, அனைத்துக் கட்சிகளும் விவாதிக்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பரஸ்பர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சட்ட வழிமுறைகளுக்கு உள்பட்டு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு ஆகும். இதை, முந்தைய 4 மக்களவைத் தேர்தல்களின்போதும் தேர்தல் அறிக்கைகளில் பாஜக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு}சேவை வரி அமலாக்கம், நிழல் நிறுவனங்களை மூடியது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த சரக்கு}சேவை வரி மசோதாவை பாஜக ஒருபோதும் எதிர்க்கவில்லை. சரக்கு}சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்தப்படும் வழிமுறைக்கே பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் இழப்புகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு எதிர்க்கட்சிகளிடையே அச்சம் நிலவியது. ஆனால், அந்த வரி விதிப்பு முறையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றார் அமித்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com