ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: யாத்ரீகர்கள் 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 9 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 9 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து உதய்பூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:
குஜராத்தில் இருந்து யாத்ரீகர்களுடன் தனியார் பேருந்து ஒன்று உதய்பூர் மாவட்டத்துக்கு வந்துகொண்டிருந்தது. நெஹ்லா எனும் கிராமம் அருகே அந்தப் பேருந்து சனிக்கிழமை வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பினர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்தது.
இவ்விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் காண்பதற்காக குஜராத்தில் இருந்து அவர்கள் வந்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் நேரிட்டுவிட்டது என்று ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இரங்கல்: இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com