ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்: ஐஆர்சிடிசி திட்டம்

ரயில் நிலையங்களில் கூடுதலாக 1,100 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவ, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) திட்டமிட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்: ஐஆர்சிடிசி திட்டம்

ரயில் நிலையங்களில் கூடுதலாக 1,100 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவ, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் பயணிகளுக்கு மிகக் குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்குவதற்காக ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவும் திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது.
அதன்படி, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 345 ரயில் நிலையங்களில் 1,106 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. ரூ.1-க்கு 300 மி.லி. என்ற வீதத்தில் இங்கு குடிநீர் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை மேலும் சில ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், நிகழ் நிதியாண்டின் (2017-18) இறுதிக்குள், 450 ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவ ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது என அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com