கழிப்பறை கட்ட முடியவில்லை என்றால் மனைவியை விற்று விடுங்கள்: நீதிபதியின் சர்ச்சை பேச்சு

உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள் என்று கூறிய மாவட்ட நீதிபதியின் பேச்சு பெரும்
கழிப்பறை கட்ட முடியவில்லை என்றால் மனைவியை விற்று விடுங்கள்: நீதிபதியின் சர்ச்சை பேச்சு

அவுரங்கபாத்: உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள் என்று கூறிய மாவட்ட நீதிபதியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள ஜம்ஹோர் கிராமத்தில் பிகாரில் மாவட்ட நீதிபதியாக உள்ள கன்வால் தனுஜ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் வீடுகளில் கழிப்பிடம் கட்டுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தினர் முன்னிலையில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்  கழிப்பறை இல்லாததால், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்தும் திறந்த வெளியில் மல ஜலம் கழிப்பதால் ஏற்படும் கேடுகள் பற்றியும் பேசினார்.

அப்போது, பிகார் அரசு கழிப்படம் கட்ட ரூ.12 ஆயிரம்  நிதியுதவி அளிப்பது பற்றியும் குறிப்பிட்டார். ரூ.12 ஆயிரம் செலவிட்டால் கழிப்பறை கட்டிவிடலாம் என்று வலியுறுத்திய அவர், கூடியிருந்த மக்களைப் பார்த்து ரூ.12 ஆயிரத்தை விட தங்கள் மனைவியை தாழ்வாக நினைப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டு கை உயர்த்தச் சொன்னார்.

அப்போது, ஒருவர் எழுந்து தனக்கு கழிப்பறை கட்ட பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதில் கூறிய தனுஜ், நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் உங்கள் மனைவியின் கவுரவத்திற்கு மரியாதை கொடுங்கள், ஒரு கழிப்பிடம் கட்ட அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் செலவாகும், உங்கள் மனைவியின் கவுரவம் ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவாகவா மதிப்பிடுகிறீர்கள். வெறும் 12 ஆயிரம் ரூபாய்க்காக உங்கள் மனைவியின் கவுரவத்தை விற்க முடியுமா உங்களால்? என்று கேள்வி எழுப்பியவர், “கழிப்பறை இல்லையென்றால், வீட்டில் இருக்கும் மனைவியை விற்று விடுங்கள் அல்லது ஏலம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கழிப்பறை கட்ட பணமில்லை என்று சொல்லுங்கள்” என்று பேசினார்.

மேலும், உங்களில் பலர் தேவையில்லாமல் நிறைய செலவு செய்வீர்கள். அத்தியாவசியமான செலவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று பேசினார்.

உத்தரபிரதேச மாநிலம், அவுரங்காபாத் மாவட்ட நீதிபதி கன்வால் தனுஜின் கட்டுப்பாடு அல்லாத பேச்சு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது.

அதிகாரிகள் பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், நீதிபதி ஒருவர் நடத்தை விதிகளுக்கு எதிராக பேசியிருப்பது குறித்து . பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் ஜூஹி சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com