இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமச்சந்திர ராவ் காலமானார்

பெங்களூருவில் வசித்து வந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ்(85) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமச்சந்திர ராவ் காலமானார்

பெங்களூரு: பெங்களூருவில் வசித்து வந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ்(85) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் அதம்பூர் என்ற கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார் உடுப்பி ராமசந்திர ராவ் (85). பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான நூல்களை கற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்தும், விண்வெளி இயற்பியல், உயர் ஆற்றல் வானியல், விண்வெளி பயன்பாடுகள், செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய 350 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து இவரது வழிகாட்டுதலின் படி, 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஆப்பிள், ரோஹிணி, இன்சாட்-1, இன்சாட்-2 உள்பட பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் செயற்கைக்கோள் மைய இயக்குநராக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக பணியாற்றினார்.

1984 ஆம் ஆண்டு விண்வெளி மையத்தின் செயலாளர் மற்றும் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவர் ராக்கெட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார்,

ஜியோ ஸ்டேஷனரி வெளியீட்டு வாகனம் (GSLV) மற்றும் 1991 ஆம் ஆண்டில் கிரிகோனிக் டெக்னாலஜி வளர்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சியைத் தொடங்கினார்.

இஸ்ரோ வட்டாரத்தில் யு.ஆர்.ராவ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் உடுப்பி ராமசந்திர ராவ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதயநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை இதய நோய் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.ஆர்.ராவ், 1976 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், உலகின் முன்னணி விண்வெளி விஞ்ஞானிகளில் ஒருவரான இவருக்கு 2017 ஆம் ஆண்டின்  தொடக்கத்தில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது  கர்நாடகாவின் ராஜ்யோத்சவ் விருது, மேகநாத் சாகா, ஜாகீர் உசேன், ஆர்யபட்டா உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மார்ச் 19, 2013 அன்று, வாஷிங்டன் டிசி.யில் உள்ள 'சேட்டிலைட் ஹால் ஆஃப் ஃபேம்', மற்றும் மெக்சிகோவின் குவாடலஜாராவில் 'ஐஏஏஹால் ஹால் ஆஃப் ஃபேம்' ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய விஞ்ஞானி ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com