சமூக வலைதளங்களின் வரவால் செய்தித்தாள் படிக்கும் நேரம் குறைந்தது: அசோசேம்

முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (டுவிட்டர்), வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வரவால் இந்தியாவில் செய்தித்தாள்களைப் படிக்கும் நேரமும், தொலைக்காட்சி பார்க்கும் நேரமும் குறைந்துவிட்டதா
சமூக வலைதளங்களின் வரவால் செய்தித்தாள் படிக்கும் நேரம் குறைந்தது: அசோசேம்

முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (டுவிட்டர்), வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வரவால் இந்தியாவில் செய்தித்தாள்களைப் படிக்கும் நேரமும், தொலைக்காட்சி பார்க்கும் நேரமும் குறைந்துவிட்டதாக அசோசேம் (இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், புணே, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களைச் சேர்ந்த 235 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், நடுத்தர வயதினரை விட இளைஞர்கள் மத்தியில் செய்தித்தாள் படிக்கும் நேரமும், தொலைக்காட்சி பார்க்கும் நேரமும் அதிக அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் செய்தித்தாள், தொலைக்காட்சிக்கு படிக்கும் நேரத்தைக் குறைத்துவிட்டனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நாளும் அரைமணி நேரத்துக்கும் குறைவாகவே செய்தித்தாள்களைப் படிப்பதாக பலர் கூறியுள்ளனர். அதேபோல தொலைக்காட்சி பார்க்கும் நேரமும் குறைந்துவிட்டது.
எனினும், இந்தியாவில் பத்திரிகை, செய்தித் தொலைக்காட்சித் துறை தொடர்ந்து வலுவாகவே உள்ளது. 6.2 கோடி பேர் காலை நாளிதழ்களை தினம்தோறும் தவறாமல் வாங்குகிறார்கள்.
ஆனால், அவற்றை வாசிக்கும் நேரம்தான் குறைந்துவிட்டது. காலை எழுந்தவுடன் செல்லிடப்பேசி மூலம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக அசோசேம் செயலாளர் டி.எஸ். ராவத் கூறியதாவது:
ஆதாரமற்ற பல செய்திகளும், தேவையற்ற பல தகவல்களும் சமூக வலைதளங்கள் மூலம்தான் பெருமளவில் பரவுகின்றன. அதுபோன்ற நம்பகத்தன்மையற்ற தகவல்களைப் படிப்பவர்கள் மற்றும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தத்துக்குரியதுதான்.
எனினும், இந்தியாவில் அச்சு ஊடகமும், மின்னணு ஊடகமும் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது.
இணையதளத்தின் உதவியுடன் உபயோகமான தகவல்களை பொதுமக்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் விருப்பங்களுக்கு ஏற்பட ஊடகத்துறையினரும் தங்கள் உத்திகளை மாற்றி வருகின்றனர். நாளிதழ்களும், செய்தித் தொலைக்காட்சிகளும் தனியாக இணையதளங்கள் மூலம் செய்திகளை மக்களுக்கு அளித்து வருகின்றன. அதன் மூலம் அவர்களது விளம்பரம் அதிகரித்து, வர்த்தகரீதியாகவும் பயனடைகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com