700 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

காஷ்மீரில் 1989-90ஆம் ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி
700 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

காஷ்மீரில் 1989-90ஆம் ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த கொலை வழக்குகளில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாஸின் மாலிக் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக 'காஷ்மீரின் வேர்கள்' என்ற அமைப்பு சார்பில் வழக்குரைஞர் விகாஷ் பதோரா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 1989-90ஆம் ஆண்டுகளில் பண்டிட்டுகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது பயங்கரவாதிகளால் 700-க்கும் மேற்பட்ட பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இதில் எந்த வழக்கிலும் முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவு எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஏன் நீதித்துறையே கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, 700-க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் நிகழ்ந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, இனிமேல் அங்கு நடைபெற்ற கொலைகள், கொள்ளைகள், அத்துமீறல்கள் குறித்து ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினம். இதற்கான ஆதாரங்களை எப்படித் திரட்டுவது என்று மனுதாரரால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com