கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து


புதுதில்லி: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று 'கார்கில் போர் வெற்றி தினத்தின் 18-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின் போது "நமது நாட்டின் பெருமைக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் போராடிய நமது துணிச்சலான வீரர்களை நினைவு கூர்ந்தார்."

ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவு கூற வேண்டும் என்று டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராணுவ வலிமை மற்றும் ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பெரும் தியாகங்கள் இந்தியாவை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பதை கார்கில் போர் நமக்கு நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இன்று கொண்டாடப்படும் வெற்றி நினைவு தின நிகழ்ச்சியில், தில்லியில் இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் (அமர் ஜவான் ஜோதி)  பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாட்டங்கள் திங்களன்று தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே நாளில் 1999 ஆம் ஆண்டு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. 60 நாட்கள் பாகிஸ்தானிடம் இந்திய ராணுவ கடுமையாக போராடி, இந்த வெற்றியை பெற்று தந்தது.  

இந்த போரில் இந்திய ஆயுதப் படைகளிலிருந்து 500 க்கும் அதிகமான வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். கார்கில் போர் வீரர்களுக்கு 4 பரம் வீர் சக்ராஸ், 9 மகாவீர சக்ராஸ், 53 வீக் சக்ராஸ் மற்றும் பிற பதக்கங்களும் பாராட்டு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com