நிதிஷ் ஒரு கொலைக் குற்றவாளி: லாலு பிரசாத் யாதவ்

முன்கூட்டிய முடிவு செய்துவிட்டுத்தான் பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார் என லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டினார்.
நிதிஷ் ஒரு கொலைக் குற்றவாளி: லாலு பிரசாத் யாதவ்

பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டார் நிதிஷ் குமார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு பாஜகவுடனான கூட்டணி வாய்ப்பை அவர் மறுக்கவில்லை.

மோடியுடன் நிதிஷ் எப்போதோ கூட்டணி சேர்ந்துவிட்டார். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பிறகு ஏன் நிதிஷ் ராஜினாமாவுக்கு மோடி பாராட்ட வேண்டும். 

நிதிஷ் குமார் ராஜினாமா செய்துவிட்டதால் தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவியும் காலியாகிவிட்டது. எனவே இந்த விவகாரங்களில் இருந்து நிதிஷும், தேஜஸ்வியும் விலகி இருக்கட்டும். ஆர்ஜேடி, ஜேடியு மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து அடுத்த முதல்வரை தேர்வு செய்யட்டும். 

சட்டப்பேரவையில் நாங்கள் தான் அதிக பலம் பெற்றவர்கள். எனவே அடுத்த முதல்வராக எங்கள் கட்சிக்காரர்தான் வரவேண்டும். தேஜஸ்வியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ் குமார்  தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

எந்தத் தவறும் இல்லாத போது தேஜஸ்வி ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். அதுகுறித்த போதிய விளக்கங்களை நான் ஏற்கனவே நிதிஷிடம் தெரிவித்துவிட்டேன். இனி அதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.

நிதிஷ் குமார் ஒன்றும் உத்தமரல்ல. அவரும் ஆயுத வழக்கு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் குற்றவாளிதான். இது ஊழலை விட மிகப்பெரிய குற்றச்செயலாகும். இதனை நிதிஷே ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தனது தேர்தல் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இது எங்களுக்கு எப்போதோ தெரியும். ஆனால் அதனை வெளியில் கூறினால் கூட்டணி தர்மத்தை மீறுவதாக அமையும். எனவே அதில் அமைதி காத்தோம்.

இந்த ராஜினாமா நாடகம் எல்லாம் முன்கூட்டிய முடிவு செய்ததுதான். தற்போது ஆர்.எஸ்.எஸ் உடன் நெருக்கம் காட்டவே நிதிஷ் இந்த முடிவை மேற்கொண்டார் என சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com