ராணுவ தளபதியை தவறாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் மீது வழக்குப்பதிவு

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ தளபதியை தவறாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் மீது வழக்குப்பதிவு


லக்னோ: இந்திய ராணுவத் தலைமைத் தளபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதனை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித், தெருச் சண்டையில் ஈடுபடும் ரெளடி போல விபின் ராவத் பேசுவதாகக் கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தாம் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் சந்தீப் தீட்சித் டுவிட்டரில் பதிவிட்டார்.

ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பாஜக, இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் கட்டுப்பாடின்றி எந்தக் கருத்தையும் கூற காங்கிரஸாருக்கு அக்கட்சித் தலைமை அனுமதியளித்துள்ளதாகவும் விமர்சித்தனர்.

அதேவேளையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ராணுவ தளபதியை யாரும் விமர்சிக்க கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்திய ராணுவ தளபதியை தவறாக விமர்சித்ததாக கூறி, லக்னோவில் உள்ள ஹுசைன் ஜிங் காவல்நிலையத்தில் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com