ஆக.15 முதல் சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் சங்கல்ப யாத்திரையை
ஆக.15 முதல் சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் சங்கல்ப யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ராம்நாத் கோவிந்தின் பதவியேற்பு விழாவுக்கு முன் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசியது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழைகளின் நலன், சமூக நல்லிணக்கம், சாமானிய மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் நல்லாட்சி ஆகிய மூன்று விஷயங்களை எம்.பி.க்கள் முன்னெடுக்க வேண்டும்.
நம் நாடு வரும் 2022-ஆம் ஆண்டில் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. அதற்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் சங்கல்ப யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 370 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு உச்சங்களைத் தொட்டுள்ளதாகவும், வரும் 2022-இல் உலகில் சக்திவாய்ந்த நாடாக அது உருவெடுக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.
கடைக்கோடி மனிதனும் பயன்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது. அதன்படி ஆகஸ்ட் 9-ஆம் தேதியும், 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்றும் பல்வேறு நிகழ்சிகளை நடத்துமாறும் எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்
அந்த ஒரு வார காலத்தில் திரங்கா யாத்திரையை (மூவர்ணக்கொடி யாத்திரை) மேற்கொள்ளுமாறு பிரதமர் எம்.பி.க்களை வலியுறுத்தினார். அதேபோல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும்போது தில்லியில் இருக்குமாறும், இந்தத் தேர்தலில் தவறுகளைச் செய்து வாக்குகள் செல்லாமல் போவதைத் தவிர்க்குமாறும் அனைத்து எம்.பி.க்களையும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்று அனந்த குமார் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தலைவர் மீது காகிதங்களை வீசிய எம்.பி.க்களுக்கு பாஜக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com