டோகலாம் பகுதியில் இருந்து இந்திய வீரர்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்: சீன வெளியுறவுத் துறை அமைச்சர்

டோகலாம் பகுதியில் இருந்து இந்திய வீரர்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்: சீன வெளியுறவுத் துறை அமைச்சர்

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் இருந்து, தனது படை வீரர்களை மனசாட்சிபடி இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கேட்டுக் கொண்டுள்ளார்.

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் இருந்து, தனது படை வீரர்களை மனசாட்சிபடி இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கேட்டுக் கொண்டுள்ளார்.
பாங்காக்கில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசுகையில், 'எது சரி, எது தவறு என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய மூத்த அதிகாரிகள் கூட, இந்திய பிரதேசத்துக்குள் சீன துருப்புகள் ஊடுருவவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்' என்றார்.
இதேபோல், சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்துக்கு அவர் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், 'சீன பிரதேசத்துக்குள் தங்கள் படைகள் ஊடுருவியிருப்பதை இந்தியத் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதாகும். அதாவது, மனசாட்சிப்படி படைகளை (இந்தியா) திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
டோகலாம் பிரச்னை குறித்து சீன அரசு பத்திரிகைகளில், இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், சீன அரசு மட்டத்தில் மிக உயரிய பதவிகளை வகிப்போர் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்தனர். முதல்முறையாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியை நோக்கி சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதியில் சீனாவும், இந்தியாவும் தனது படைகளை குவிக்கத் தொடங்கின. இதனால், அப்பகுதியில் 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில், டோகலாம் உள்ளது. அந்தப் பகுதியை தங்களுக்குச் சொந்தமான பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அப்பகுதியில் இந்திய வீரர்கள் ஊடுருவியிருப்பதாகவும் சீனா குற்றம்சாட்டி வருகிறது. இதை இந்தியா மறுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com