திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் எவ்வளவு?: மாநிலங்களவையில்எதிர்க்கட்சிகள் கேள்வி

திரும்பப் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை தெரிவிக்காதது ஏன் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கேள்வியெழுப்பின.

திரும்பப் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை தெரிவிக்காதது ஏன் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கேள்வியெழுப்பின.
மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்து 9 மாதங்களாகிவிட்டன.
எனினும், செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட எத்தனை 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்டன என்ற விவரத்தை ரிசர்வ் வங்கியால் இன்னும் கூற முடியவில்லை.
ஒரு குழந்தைகூட 9 மாதங்களில் பிறந்து விடுகிறது. ஆனால், எத்தனை செல்லாத ரூபாய் நோட்டுகள் திருப்பிச் செலுத்தப்பட்டன என்பதை நாட்டு மக்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
நிலவுக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்புவது குறித்து நாம் விவாதிக்கிறோம். ஆனால், ரூபாய் நோட்டுகளை எண்ணக்கூட நம்மால் முடியவில்லை என்றார் அவர்.
ஆனந்த் சர்மாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com