ஒரு குடும்பத்துக்காக சேவை செய்ய முடியாது: லாலு மீது நிதீஷ் மறைமுக தாக்கு

ஒரு குடும்பத்துக்காக தன்னால் சேவை செய்ய முடியாது என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்தார்.
பிகார் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக எம்எல்ஏக்கள்.
பிகார் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக எம்எல்ஏக்கள்.

ஒரு குடும்பத்துக்காக தன்னால் சேவை செய்ய முடியாது என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்தார்.
மகா கூட்டணிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக நிதீஷ் குமார் மீது ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவும், அவரது கட்சியும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இவ்வாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பிகார் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது அரசு மீதான நம்பிக்கை வாக்குக்கோரும் தீர்மானத்தில் நீதிஷ் குமார் பேசியதாவது: தேர்தலில் எனக்கு வாக்களித்து தேர்வு செய்தது, மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். மக்கள் நீதிமன்றம்தான், நாட்டில் மிகப்பெரிய நீதிமன்றம் ஆகும். அவர்களுக்கு சேவை செய்வதே எனது பணியாகும்; குறிப்பிட்ட ஒரு குடும்பத்துக்கு சேவை செய்வது எனது பணி கிடையாது.
மதச்சார்பின்மை குறித்து யாரும் எனக்கு பாடம் நடத்த வேண்டாம். மதச்சார்பின்மை என்பது நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடியது. மதச்சார்பின்மை என்ற அடையாளத்தில் மறைந்து கொண்டு, ஊழல் வழிகளில் சொத்துகளை வாங்கி குவிப்போருடனும், பாவங்கள் செய்யும் நபர்களுடனும் என்னால் தொடர்ந்து கூட்டணியில் இருக்க முடியாது.
கூட்டணி தர்மத்தை நான் எப்போதும் கடைப்பிடித்துள்ளேன். மக்களுக்குஅளித்த உறுதியை நிறைவேற்ற அரசை வழிநடத்த நான் முயற்சி செய்தேன்.
ஊழல் புகார் குறித்து அவரிடம் (தேஜஸ்வி) விளக்கமளிக்கும்படி நான் கேட்டேன். ஆனால், அதற்கு பதிலளிக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை. எனவே, அரசை தொடர்ந்து நடத்துவது கடினமாகிவிட்டது. ஆதலால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வருவதென்ற முடிவுக்கு நான் வந்தேன். பிகார் நலன், பிகாரின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை நான் எடுத்தேன்.
தற்போது பிகாரில் ஆட்சியமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான், மத்தியில் ஆட்சியில் உள்ளது. இதனால், பிகார் மாநிலத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பிகார் மாநிலம், வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு செல்லும்.
மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் என்மீது குற்றம்சாட்டியுள்ளனர் (காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார்). பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத், 15 முதல் 20 இடங்களே அளிக்க முன்வந்தார். அப்போது நான்தான், காங்கிரஸýக்கு 40 இடங்கள் அளிக்க உதவினேன். இதனால்தான், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸால் 27 இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்றார் நிதீஷ் குமார்.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி பேசியதாவது:
ஊழல், நல்ல நிர்வாகத்துக்காகவே, 2015}ஆம் ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். சட்டவிரோதமான வழிகளில், பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவிக்க அல்ல. முகமது சகாபுதீன், ராஜ்வல்லப் யாதவ் போன்ற நபர்களுடன் இருந்த முந்தைய அரசால், நல்ல நிர்வாகத்தை அளிப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆதலால், மகா கூட்டணியை விட்டு வெளியேறுவதென்ற நிதீஷ் குமாரின் முடிவு வரவேற்கத்தக்கதாகும் என்றார் சுஷில் குமார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com