நாகாலாந்து முன்னாள் முதல்வர் லீசிட்சுவின் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

நாகாலாந்து முன்னாள் முதல்வர் ஷீரோசெலி லீசிட்சு (80) போட்டியிடும் வடக்கு அங்காமி தொகுதியில் இன்று சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று
நாகாலாந்து முன்னாள் முதல்வர் லீசிட்சுவின் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

நாகாலாந்து முன்னாள் முதல்வர் ஷீரோசெலி லீசிட்சு (80) போட்டியிடும் வடக்கு அங்காமி தொகுதியில் இன்று சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடும் அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் கிகேரி யுகோமி களமிறங்கியுள்ளார்.

முன்னதாக, டி.ஆர். ஜீலியாங்குடன் (இப்போதைய முதல்வர்) ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியில் இருந்து லீசிட்சு கடந்த வாரம் நீக்கப்பட்டார். லீசிட்சு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டபோது அவர் எம்எல்ஏவாக இல்லை. எனவே, லீசிட்சு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுவதற்கு வசதியாக அவரது மகன் கிரியூகு தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, அவரது தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப்போது, முதல்வர் பதவியை இழந்துவிட்ட நிலையில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் யுகோமி, சமூக சேவகராகவும், கல்வியாளராகவும் மக்களால் அறியப்பட்டவர். நாகாலாந்து பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அங்காமி தொகுதியில் இருந்து 2003, 2008-ஆம் ஆண்டு தேர்தலில் லீசிட்சு வெற்றி பெற்றுள்ளார். 2013-ஆம் ஆண்டு தேர்தலில் தனது மகன் அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். இப்போது, இடைத்தேர்தலில் அவர் மீண்டும் களமிறங்கியுள்ளார். அத்தொகுதியில் மொத்தம் 16,235 வாக்குகள்தான் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com