குஜராத் கடற்கரையில் ரூ,3,500 கோடி ஹெராயின் பறிமுதல்

குஜராத் கடற்கரையில் ஒரு சரக்கு கப்பலில் இருந்து, 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,500 கிலோ, 'ஹெராயின்' போதை பொருளை இந்திய
குஜராத் கடற்கரையில் ரூ,3,500 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத் கடற்கரையில் ஒரு சரக்கு கப்பலில் இருந்து, 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,500 கிலோ, 'ஹெராயின்' போதை பொருளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

சரக்குக் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் இருப்பதாக உளவுத்துறை ரகசியத் தகவல் அளித்ததன் அடிப்படையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் கடற்கரையில் ‘சமுத்ரா பவக்’ என்ற கடலோரக் காவல் படை குஜராத் மாநில எல்லோயோரக் கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலை நேற்று சனிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் வழிமறித்து சோதனையிட்டது.

அப்போது, கப்பலில் இருந்த, 3,500 கோடி மதிப்புள்ள, 1,500 கிலோ 'ஹெராயின்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து இந்திய கடலோர படை, மத்திய உளவுத்துறை, போலீஸ், சுங்க துறை, கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று என்று ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி அபிஷேக் மதிமான் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com