சீனாவுக்கு பொறியியல் துறை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

சீனாவுக்கு இந்தியா பொறியியல் துறை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்வது கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 123 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு இந்தியா பொறியியல் துறை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்வது கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 123 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (சிசிபிசி) கூறியுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புக்கு பொறியியல் துறை சார்ந்த பொருள்களின் எற்றுமதி நடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 123 சதவீத அதிகரிப்பாகும். இதில் இரும்பு அல்லாத பிற உலோகங்களான அலுமினியம், தாமிரம், அலாய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருள்கள்தான் அதிகம்.
இந்தியா} சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் ரூ.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள நிலையில், பொறியியல் துறை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஓராண்டில் 2.1 சதவீதம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 4.39 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவுக்கு பொறியியல் துறை சார்ந்த பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்வதில் மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் சீனாவில் பல்வேறு முக்கிய உலோகங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவை அடுத்து தென்கொரியாவுக்கு அதிக அளவில் பொறியியல் துறை சார்ந்த பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com