செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணிக்கு 50 இயந்திரங்களை வாங்குகிறது ரிசர்வ் வங்கி

பழைய ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணுதல் உள்ளிட்ட பணிகளுக்காக 50 இயந்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குகிறது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணிக்கு 50 இயந்திரங்களை வாங்குகிறது ரிசர்வ் வங்கி

பழைய ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணுதல் உள்ளிட்ட பணிகளுக்காக 50 இயந்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குகிறது.

இந்த இயந்திரங்களை, நாடு முழுவதும் உள்ள தனது 18 பிராந்திய அலுவலகங்களில் நிறுவ ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியில் (டெண்டர்) தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 18 பிராந்திய அலுவலகங்களில், செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணவும், தரம் பிரிக்கவும், நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் 50 இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்கள், கணினி சார்ந்ததாகவும், மைக்ரோ புரொசசரால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
விநாடிக்கு தலா 30 நோட்டுகளை எண்ணி, தரம்பிரித்து, நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அந்த இயந்திரங்கள் இருக்க வேண்டும்.
அனைத்து வகை செல்லாத ரூபாய் நோட்டுகள், பல்வேறு பிரிவு இந்திய ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை கண்டுபிடிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தபுள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கும், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கியால், நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் புழக்கத்தில் இருந்த அந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, வங்கிகளில் மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்தனர். அப்போது நாடு முழுவதும் எவ்வளவு மதிப்பில் பழைய ரூ.500, ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
அந்த நோட்டுகளை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அது முடிந்ததும், எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com