"ஜெய் ஸ்ரீ ராம்' கோஷத்தை முஸ்லிம் அமைச்சர் எழுப்பியதால் சர்ச்சை

பிகார் சட்டப் பேரவை வளாகத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் குர்ஷித் என்ற ஃபெரோஸ் அகமது எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
"ஜெய் ஸ்ரீ ராம்' கோஷத்தை முஸ்லிம் அமைச்சர் எழுப்பியதால் சர்ச்சை

பிகார் சட்டப் பேரவை வளாகத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் குர்ஷித் என்ற ஃபெரோஸ் அகமது எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிகாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அரசில் ஃபெரோஸ் அகமது கரும்பு ஆலை தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

சிக்டா தொகுதி எம்எல்ஏவான அவர் கடந்த 28}ஆம் தேதியன்று மாநில சட்டப் பேரவை வளாகத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினார்.

இதற்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாட்னாவில் உள்ள இமாரத் ஷரியா என்ற முஸ்லிம் அமைப்பின் நிர்வாகியான முஃப்தி சோஹைல் அகமது காஸ்மி கூறியதாவது:
 ரசூல் எனப்படும் இஸ்லாமிய இறைத் தூதரையும், ஹிந்துக் கடவுளான ராமரையும் எந்த நபர் வழிபடுகிறாரோ, ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை யார் எழுப்புகிறாரோ அவர் தானாகவே இஸ்லாமிய மதத்தில் இருந்து விலக்கப்படுகிறார்.

அமைச்சர் ஃபெரோஸ் அகமதுவின் கருத்தை நான் செய்தித்தாள்களில் பார்த்தேன். இந்தப் பின்னணியிலேயே அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தேன். எனினும், எங்கள் அமைப்பு வெளியிடம் ஃபத்வா (தடை உத்தரவு) அல்ல இது. முஸ்லிம் அறிஞர் என்ற வகையில் எனது கருத்தைத் தெரிவித்தேன் என்றார் அவர்.

இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான அப்துல் பாரி சித்திக்கி கூறுகையில், அமைச்சர் ஆர்வ மிகுதி ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதாவது ராஜ்யம் கிடைத்ததோ என்று தோன்றுகிறது என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வர் கூறுகையில், அமைச்சர் ஃபெரோஸ் கான் பதவிக்காக எந்த அளவுக்கும் கீழிறங்கிச் செல்லக் கூடியவர். இது போன்றவர்களுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

இதனிடையே, தனது செயலால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் ஃபெரோஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மாநில மக்களின் நலனுக்காக ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை எழுப்ப நான் தயங்க மாட்டேன். அதேவேளையில் எனது கருத்து யாரையாவது புண்படுத்தினால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com