66 பள்ளிகளில் ஒருவர் கூட 'பாஸ்' இல்லை: ஜார்க்கண்ட் பள்ளிகளின் 'ஷாக்'  ரிசல்ட்! 

கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியான ஜார்கண்ட் மாநில பத்தாவது மற்றும் +2 தேர்வு முடிவுகளில், 66 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத கொடுமை நிகழ்ந்துள்ளது.
66 பள்ளிகளில் ஒருவர் கூட 'பாஸ்' இல்லை: ஜார்க்கண்ட் பள்ளிகளின் 'ஷாக்'  ரிசல்ட்! 

ராஞ்சி: கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியான ஜார்கண்ட் மாநில பத்தாவது மற்றும் +2 தேர்வு முடிவுகளில், 66 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத கொடுமை நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநில பத்தாவது மற்றும் +2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஜார்கண்ட் மாநில கல்வி கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி 10-ஆம் வகுப்பு தேர்வில் 57.9 சதவீத மாணவர்களும், மேனிலைக் கல்வி அறிவியல் பிரிவில் 52.36 சதவீதமும், மேனிலைக் கல்வி கணிதப் பிரிவில் 60.03 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆனால் ஜார்கண்ட் மாநில கல்வி கழக அறிக்கையின்படி,  பத்தாவது மற்றும் +2 தேர்வுகளை எழுதிய 66 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வந்துள்ளது.

அதன்படி 33 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்தம் 240 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதே போல 33 பள்ளிகளில் +2 தேர்வு எழுதிய மொத்தம் 148 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ள பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர், இந்த விவகாரத்தை ஜார்கண்ட் மாநில கல்வி கழக தலைவர் அர்விந்த் பிரசாத் சிங் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரும் இதனை கவனிப்பதாக உறுதியளித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com