பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவும்-ஸ்பெயினும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிய இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை ஸ்பெயின் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி வரவேற்ற அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோய்.
அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை ஸ்பெயின் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி வரவேற்ற அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோய்.

பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிய இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
அரசுமுறைப் பயணமாக ஸ்பெயினுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
ஜெர்மனியிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்குச் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை புதன்கிழமை காலை சந்தித்தார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:
மரியானோ ரஜோயை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இருநாடுகளும் பயங்கரவாதம் எனும் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாக அவரிடம் மோடி கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிய இருநாடுகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் என்றார் கோபால் பாக்லே.
மேலும், இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுவரும் ரயில்வே, நவீன நகரங்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஸ்பெயின் உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, ரஜோய் தலைமையிலான ஸ்பெயின் அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் புகழ்ந்தார்.
கடந்த 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்பெயினுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
7 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இதனிடையே, விமானப் போக்குவரத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஸ்பெயின் அதிபர் மரியானோ ரஜோயுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, இருவர் முன்னிலையிலும் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தண்டனை வழங்கப்பட்ட நபர்களை பரஸ்பரம் நாடு கடத்துதல், ராஜீயரீதியிலான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாமல் இருநாடுகளுக்கும் செல்ல அனுமதிப்பது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஸ்பெயின் மன்னருடன் மோடி சந்திப்பு: இந்நிலையில், ஸ்பெயின் மன்னர் 6-ஆவது ஃபிலிப்பை பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
சமூக வலைதளமான சுட்டுரையில் வெளியுறவுச் செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.
தலைமைச் செயல் அதிகாரிகளுடன் மோடி சந்திப்பு: இதற்கிடையே, ஸ்பெயினில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (சிஇஓ) பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'ஸ்பெயினில் முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்களுடன் கலந்துரையாடினேன். அப்போது, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வருமாறு அழைப்புவிடுத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com