ஜிஎஸ்டியை மேற்கு வங்கம் ஆதரிக்காது: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை (ஜிஎஸ்டி) தற்போதைய வடிவத்தில் மேற்கு வங்கம் ஆதரிக்காது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டியை மேற்கு வங்கம் ஆதரிக்காது: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை (ஜிஎஸ்டி) தற்போதைய வடிவத்தில் மேற்கு வங்கம் ஆதரிக்காது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை உறுதி செய்யும் விதமாக ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஜிஎஸ்டி சட்டமானது அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது:
ஜிஎஸ்டியின் கீழ் சில பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் ஏற்புடையதாக இல்லை. ஜிஎஸ்டியின் தற்போதைய வடிவமானது சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்காது. குறிப்பாக, அமைப்பு சாரா துறைக்கு இது பொருத்தமற்றதாக உள்ளது.
எனவே, ஜிஎஸ்டியை தற்போதைய வடிவத்தில் மேற்கு வங்க அரசு ஆதரிக்காது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதனை மத்திய அரசு பரிசீலித்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் இருக்கும் சில குறைகளைக் களைவதற்கு முன்வர வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா பேசுகையில், 'ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போதைய வடிவத்தில் அனுமதிக்கப்பட்டால் மேற்கு வங்கத்தின் பொருளாதார நிலையும், வேலைவாய்ப்பும் கடுமையாக பாதிக்கப்படும்' என்றார்.
மம்தா விமர்சனம்: இதனிடையே, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திபோஸ் விமான விபத்தில் இறந்ததாக தெரிவித்த மத்திய அரசை மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூலில் அவர் வெள்ளிக்கிழமை பதிவிட்டதாவது: சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்த ஆதாரமும் இன்றி தெரிவிக்கப்பட்டுள்ள இந்த பதிலானது ஒருதலைபட்சமானது.
சுபாஷ் சந்திரபோஸ் இந்த மண்ணின் ஈடு இணையற்ற மைந்தனர். அவர் தொடர்பான விஷயங்களை இதுபோல் மேம்போக்காக கையாள்வது ஏற்கத்தக்கதல்ல என தனது பதிவில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com