நாடாளுமன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் 5 எம்பிக்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல் நூறு சதவீத நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் 5 எம்பிக்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல் நூறு சதவீத நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

540க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்கள் மட்டும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், பாஜகவை சேர்ந்த பைரன் பிரசாத் மிஸ்ரா, (உ.பி.), கோபால் ஷெட்டி (மராட்டியம்), கிரித் சோலங்கி (குஜராத்), ரமேஷ் சந்தர் கவுசிக் (அரியானா) மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குல்மானி சமல் (ஒடிசா) ஆகியோர் மட்டுமே நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.

11 நிகழ்வுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று 54 சதவீதம் வருகையைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி 5 நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று 59 சதவீதம் வருகையை பதிவு செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாண்டா தொகுதியைச் சேர்ந்த எம்பி பைரோன் பிரசாத் மிஸ்ரா 1,468 விவாதங்களில் பங்கேற்று 100 சதவீதம் வருகைப் பதிவு செய்து முதலிடம் பெற்றுள்ளார்.

முலாயம் சிங் யாதவ் வருகைப்பதிவு 79 சதவீதம். ஆனால், அவருடைய மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிளிள் வருகை வெறும் 35 சதவீதம் தான். 25 சதவீத எம்.பி.க்களே 90 சதவீதத்துக்கும் அதிகமான நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்துள்ளனர்.

எம்.பி.க்களில் மிகவும் குறைவான நாட்களே பங்கேற்றவர் தற்போது பஞ்சாப் முதல்வராக உள்ள அமரீந்தர் சிங். இவருடைய வருகைப்பதிவு 6 சதவீதம் மட்டுமே. நடிகர் சத்ருகன் சின்காவின் வருகை 70 சதவீதமாக இருந்தாலும், அவர் எந்த விவாதத்திலும் பங்கேற்றதில்லை. அதேபோல் எந்த கேள்விகளும் கேட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமரின் வருகை பதிவு கட்டாயமில்லை என்பதால் அவருடைய வருகை பதிவு விவரங்கள் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com