பாகிஸ்தான் ஆலோசகர் பரிந்துரைத்தால் இளைஞருக்கு விசா

தனது தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக இந்திய நுழைவு இசைவு (விசா) கோரிய பாகிஸ்தானிய இளைஞருக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்வந்துள்ளார்.
பாகிஸ்தான் ஆலோசகர் பரிந்துரைத்தால் இளைஞருக்கு விசா

தனது தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக இந்திய நுழைவு இசைவு (விசா) கோரிய பாகிஸ்தானிய இளைஞருக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்வந்துள்ளார்.

எனினும், அதற்கு அவர் ஒரு நிபந்தனையை விதித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சயீது அயூப். இவரது தந்தை கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ள சயீது முயன்றார். எனினும், அவருக்கு நுழைவு இசைவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் தனது நிலையை விளக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு டுவிட்டர் வலைதளம் வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
அதில், "எனது தந்தைக்கு இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக பாதிக்கும் மேற்பட்ட சொத்துகளை விற்றுவிட்டேன. எனினும், எங்களுக்கு மருத்துவ விசா கிடைக்கவில்லை. சாமானிய மக்கள் மட்டும் ஏன் சிரமத்துக்குள்ளாகிறார்கள்?' என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் தனது பதிலில், "உங்கள் நிலையறிந்து இரக்கப்படுகிறேன். உங்களது நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பரிந்துரைக்கும்பட்சத்தில், உங்கள் இருவருக்கும் விசா கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸிடமிருந்து பரிந்துரை கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே, அந்நாட்டின் குடிமக்களுக்கு இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்வதற்கான மருத்துவ விசா கிடைக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. பாகிஸ்தானுடனான உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியா இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com